உயர் திறன் கொண்ட கொரோனா பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
நொய்டா, மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர் திறன் பரிசோதனை மையங்கள் அமைகப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ.பி. முதலமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய பிரதமர் மோடி, புதிய ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 மாதிரிகளை பரிசோதிக்க முடியும் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் உதவும் என்று தெரிவித்தார்.
மேலும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைந்துள்ளது.உலகளாவிய தொற்றான கொரோனாவை இந்தியர்கள் தைரியத்துடன் எதிர்த்து போராடி வருகின்றனர். கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் குறைவு. உயர்திறன் சோதனை மையங்கள் மூலம், எதிர்காலத்தில் HIV, டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் செய்ய முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.