Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகில் எந்த வீரரும் இவரிடம் நெருங்க முடியாது – கௌதம் கம்பீர் பெருமிதம்

பேன்ஸ்டோக்ஸ் போன்று ஒரு சிறந்த வீரர் எந்த அணியிலும் இல்லை என கம்பீர் பேட்டி அளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த கௌதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது: இங்கிலாந்து வீரரான பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக அசத்தி வருகிறார். அவருடன் ஒப்பிடும் அளவிற்கு தற்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை. ஏனெனில் பென்ஸ்டாக்ஸ்  தனித்துவம் வாய்ந்தவர்.

 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் விளையாடும் விதத்தைப் பார்க்கும்போது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எந்த வீரரும் அவருடன் நெருங்கக் கூட இயலாது. அவரைப்போன்ற சிறந்த வீரர் அனைத்து அணிக்கும் தேவை. பீல்டிங், பேட்டிங், பந்துவீச்சு போன்ற மூன்று துறைகளிலும் அசத்தி வருகிறார். இவரைப்போன்ற வீரர் ஒவ்வொரு அணியிலும் அங்கம் வகிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு கேப்டனின் கனவாக இருக்கும். இவரை போன்று விளையாட வேண்டும் என பல வீரர்கள் நினைப்பார்கள், ஆனால் உலக கிரிக்கெட் அரங்கில் இவரை போன்று இப்போது எவரும் இல்லை என்று கம்பீர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |