ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சியின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஒரு பிரிவினர் சட்டபூர்வமாகவும் மற்றொரு தரப்பினர் அரசியல் ரீதியாக தீர்வு காணவும் கூறியுள்ளனர்.
ராஜஸ்தானில் ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினர் சட்டபூர்வமாக அணுகவும் மற்றொரு தரப்பினர் வழகினை வாபஸ் பெற்று அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் பதவி கேட்டு துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியத்தை தொடர்ந்து அவர் கட்சி தலைவர் பதவியிலிருந்தும் துணை முதலமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டையும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் கொறடா புகார் அளித்தார். அதன்படி 19 பேரிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினர்.
இதனை எதிர்த்து சச்சின் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் சச்சின்பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல் ஏக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் தற்போதைய நிலை அப்படியே தொடரும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் மறுத்துள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என மாநில அரசு சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆட்சியை தக்க வைப்பதற்கான முயற்சியை சட்டபூர்வமாக நீதிமன்றம் மூலமாக தொடர வேண்டும் என காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் மற்றொரு தரப்பினர் வழக்கினைத் திரும்பப் பெற்று விட்டு அரசியல் ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.