6,800 வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் முன்பு இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் மற்றும் எரிகா என்ற இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜான் எரிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். வானியல் தொடர்பான நிகழ்வுகளில் அதிக அளவு ஆர்வம் கொண்ட ஜான் தனது தோழியிடம் வித்தியாசமாக தனது காதலை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளார். இதனால் அதிக அளவு தேடலை மேற்கொண்ட ஜான் 6800 வருடங்களுக்கு ஒருமுறை பூமிக்கு மிக அருகே வரும் நியோகம் வால் நட்சத்திரம் இந்த மாதம் அமெரிக்காவில் தோன்றுவதை அறிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து சரியாக திட்டமிட்டு வெறும் கண்களால் வால் நட்சத்திரத்தை பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் பகுதியில் வைத்து தனது தோழியிடம் அவர் மீது கொண்ட காதலை வெளிப்படுத்த முடிவு செய்தார். இதனையடுத்து கடந்த 18ம் தேதி வால் நட்சத்திரம் தோன்றும் நாளில் அருகில் இருக்கும் மலைத்தொடர் பகுதிக்கு தனது காதலியை கூட்டி சென்றார். இரவு நேரத்தில் பூமியை வால்நட்சத்திரம் கடந்த சமயம் சரியாக முழங்காலிட்டு ஜான் தனது காதலியிடம் லவ் ப்ரொபோஸ் செய்தார்.
இதனை சிறிதும் எதிர்பார்க்காத எரிகா ஒரு நிமிடம் திகைத்துப் போய் பின்னர் ஜானின் ப்ரொபோஸை ஏற்றுக்கொண்டார். ஜான் தனது காதலியிடம் முழங்காலிட்டு ப்ரொபோஸ் செய்த சமயம் 6800 வருடங்களுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்சத்திரம் பூமியை கடந்தது . இதுதொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகின்றது.