Categories
உலக செய்திகள்

அதிகமா பயன்படுத்துறாங்க…. இனி இதுதான் தண்டனை – பிரான்ஸ் அரசு அதிரடி

செப்டம்பர் முதல் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் பிரான்சில் செயல்படுத்தப்பட உள்ளது.

செப்டம்பர் முதல் பிரான்ஸ் நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கும், குறிப்பாக கஞ்சா பயன்படுத்துபவர்களுக்கும் நேரடி அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் தொடர்பான வன்முறை பற்றிய கவலைகளுக்கு தீர்வு காண இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக போதைப்பொருள் தொடர்பான வன்முறைகளால் அமைதியற்ற நைஸ் நகர பயணத்தில் பிரதமர் ஜின் காஸ்டெக்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

 

ரென்ஸ் மற்றும் மார்செல்லஸ் போன்ற நகரங்களின் சோதனைகளுக்கு பின்பு நாடு முழுவதும் இந்த நேரடி அபராதம் நடவடிக்கை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 200 யூரோ அபராதத்தை 15 நாட்களுக்குள் செலுத்திவிட்டால் 150 யூரோவாக குறைக்கப்படும். ஐரோப்பாவில் கஞ்சா நுகர்வோர் அதிகம் உள்ள நாடுகளில் பிரான்ஸ் ஒன்றாகும். கனடா போன்ற பல நாடுகளில் இதை சட்டப்பூர்வமாக்கி உள்ளனர். இதர நாடுகளில் சிறிய தண்டனை கொண்ட சட்டங்கள் உள்ளது. பல நாடுகளில் கடுமையான சிறை தண்டனையும் விதிக்கப்படுகின்றனர்.

Categories

Tech |