Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் மர்ம நபர்கள்… ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ள போலீசார்..!!

கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்கள் சுற்றித்திரியும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் பீளமேடு பாலகுரு கார்டன் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை அடையாளம் அறியாத சில நபர்கள் முகமூடி அணிந்துகொண்டு அப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளனர். அத்தகைய காட்சியானது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கின்றது. அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். விசாரணையில், அப்பகுதியில் இருக்கின்ற மருத்துவர் வீடு உள்ளிட்ட மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் கண்டறிந்தனர்.

அதனைத்தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் நகரிலுள்ள பல்வேறு பகுதிகளில் இரவு நேரம் முழுவதும் காவல் துறையினரின் ரோந்துப் பணி தீவிரமாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் போலவே கடந்த ஜூலை 23ஆம் தேதி இருகூர் தீபம் நகர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் மேல்சட்டை அணியாமல் அரை நிர்வாண கோலத்தில் ஆயுதங்களுடன் அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்சி சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.

Categories

Tech |