தனக்கு 20 தடவைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்ததாக நடிகர் பொன்னம்பலம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பொன்னம்பலம். கமல், சரத்குமார், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து வில்லனாக நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கமலகாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியிலும் பொன்னம்பலம் பங்கேற்றார். இந்நிலையில் பொன்னம்பலம், உடல் நலக்குறைவால் பாதிப்புயடைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி வைரலாக பரவியது.
இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலம் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில், ”நான் அதிக திரைப்படங்களில் நடித்துள்ளேன், நன்றாகவே சம்பாதித்து வந்தேன், ஆனால், எனக்கு என்று எதையும் நான் சேர்த்து வைத்து கொள்ளவில்லை. இப்போது நான் கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நிலையில் என்னிடம் இருக்கும் அனைத்தையும் விற்றேன் எனது மருத்துவ செலவுகளை பார்த்துக்கொண்டேன். இந்த தருணத்தில் தான் நான் சரத்குமாரிடம் உதவி செய்யுமாறு கேட்டேன். அவரும் உடனடியாக எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். அதே போற்று எனது பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.