Categories
தேசிய செய்திகள்

கொரோனாவின் கோரம்… திருமணமான 5 நாள் இடைவெளியில்… தனி மரமாக நிற்கும் புது மணப்பெண்..!!

ஐந்து நாளில் கொரோனா தொற்றுக்கு தனது குடும்பத்தை பறிகொடுத்த பெண் தற்போது தனிமரமாக நிற்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஜிதேந்திர பிரசாத்-அனுராதா தம்பதியினர். அனுராதா ஆசிரியையாக பணிபுரிந்து வரும் நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் ஜிதேந்திரா, அனுராதா மற்றும் அவரது மாமனார் மாமியார் ஆகியோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி அனுராதாவின் மாமியார் ஜானகி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 20ஆம் தேதி காலையில் அனுராதாவின் மாமனார் கிருஷ்ணாவும் மாலையில் கணவர் ஜிதேந்திராவும் அடுத்தடுத்து பலியானார்கள்.

ஆனால் அனுராதா மட்டும் கொரோனாவுடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்தார். கொரோனாவில் இருந்து விடுபட்டு குணமடைந்து இருந்தாலும் அடுத்தடுத்து கணவர், மாமனார், மாமியார் உயிரிழந்தது அனுராதாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து குடும்பத்தார் அனைவரும் உயிரிழந்து அனுராதா தற்போது தனிமரமாக நிற்கின்றார். இதுவரை இவர் வசிக்கும் மாவட்டத்தில் 7634 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |