Categories
தேசிய செய்திகள்

கைல காசு இல்ல…. மாடுகளுக்கு பதில்….. மகள்களை வைத்து விவசாயி செய்த செயல்….. குவியும் பாராட்டு….!!

ஆந்திராவில் விவசாயி ஒருவர் மாடுகளுக்கு பதிலாக தனது மகள்களை வைத்து வயலில் உழவு செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவர் தனது விவசாய நிலத்தில் தக்காளிகளை பயிர் செய்து நல்ல விளைச்சல் கொடுக்க அதை சாகுபடி செய்து விற்க சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு காரணமாக அவரது தக்காளிகள் நல்ல விலைக்கு செல்லவில்லை. அவர் நஷ்டத்தை சந்தித்தார். இருப்பினும் மனம் தளராமல் மீண்டும் தக்காளியை பயிர் செய்தால் அடுத்த முறையாவது நல்ல லாபம் பெறலாம் என்று நினைத்து தக்காளியை பயிரிட முடிவு செய்துள்ளார்.

ஆனால் வயலில் உழவு செய்து பயிரிடுவதற்கு மாடுகளையும் கலப்பையையும் வாடகைக்கோ அல்லது விலைக்கு வாங்க முடியாத சூழலில் அவர் இருந்துள்ளார். இதையடுத்து மனம் தளராத அவர், கம்பு ஒன்றின் மூலம் கலப்பையை தயார் செய்து, மாடுகளுக்கு பதிலாக தனது இரண்டு மகள்களை முன்னிறுத்தி உழவு செய்துள்ளார். இரண்டு மகள்கள் மாடுகள் இருக்கும் இடத்தில் முன்னின்று கலப்பையை கையால் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள். கலப்பையின் பின் பகுதியை அழுத்தி ஊன்றியவாறு விவசாயி பின்னே செல்கிறார்.

அவருக்குப் பின் அவரது மனைவி விதைகளை தூவி வருகிறார். இதுகுறித்து அவரது மகள்களிடம் கேட்டபோது தந்தைக்கு உதவுவதில் பெருமைதான் கொள்கிறோம். இதில் எங்களுக்கு துளியளவு கூட வருத்தம் இல்லை. எங்களது தந்தை எங்களை வளர்ப்பதற்காக ஏராளமான துன்பங்களை சந்தித்துள்ளார். அதை ஒப்பிடுகையில், இவை எங்களுக்கு சாதாரணம் தான் என்று கூறினர். இவர்களது இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

 

Categories

Tech |