கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26ம் தேதி முதல் நவம்பர் 7ம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .இதைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே சென்று பயிற்சிகளை மேற்கொள்ளப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி,ரெய்னா போன்ற வீரர்கள் முன்னதாகவே சென்னைக்கு வந்து பயிற்சியை மேற்கொண்டனர் அப்போது கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் தனது சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றுவிட்டனர்.அதனால் இவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு முன்னதாகவே செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.