உலகளவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தலைவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எப்போது சரியாகும் என்பது தான் தற்போது மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தற்போது கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், கொரோனா வைரஸால் உலக அளவில் ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 லட்சத்து 20ஆயிரம் பேர் இந்த தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும்போது நாம் பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் தாமதமாகும் . ஆனால் தற்போதைக்கு பாதுகாப்பாக வாழ்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொள்ளமுடியும் என்று கூறியுள்ளார்.