Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க…. ”பாஜக சதி திட்டம்” …. ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை கவிழ்ப்பதற்கு பாஜக முயற்சி செய்து வருவதாக ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியை தவிர்ப்பதற்காக பாஜக கட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் குற்றம் கூறியுள்ளனர். சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 2 காங்கிரஸ் கூட்டத்திலும் சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் எவரும் பங்கேற்கவில்லை. அத்தகைய காரணத்தால் அவரின் துணை முதல்வர் பதவியானது பறிக்கப்பட்டது. அதே சமயத்தில் அவர்கள் அனைவரையும் தகுதிநீக்கம் செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதற்கு எதிராக சச்சின் பைலட்  ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விவகாரத்தில் சபாநாயகர் எத்தகைய முடிவையும் எடுக்கக் கூடாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைக் குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில், “ராஜஸ்தான் அரசை கவிழ்க்க கூடிய முயற்சியில் பாஜக ஈடுபட்டு சதி செய்து கொண்டிருக்கிறது. மேலும் ராஜஸ்தானில் இருக்கின்ற 8 கோடி மக்களையும் அக்கட்சி முழுவதுமாக அவமதிக்கின்றது. சட்டப்பேரவையை கூட்டினால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு பெரும்பான்மை இருக்கின்றது என்ற உண்மையை நாடு அறிந்துகொள்ளும்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |