மீன ராசி அன்பர்களே…! இன்று குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். அரசால் ஆதாயமும் உண்டாகும். சொத்து பிரச்சனை நல்ல தீர்ப்பு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். சுய சிந்தனையில் அக்கறை கொள்வீர்கள். கூடுமானவரை பேசும்போது நிதானத்துடன் பேசுங்கள் அது போதும். அதே போல பிறரிடம் ஆலோசனை கேட்டு சில முக்கிய பணிகளை செய்யுங்கள். உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் பொறுமையாக இருப்பது ரொம்ப நல்லது.
யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். அதேபோல ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் சில வகையில் உருவாகும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். வீடு வாகனம் தொடர்பான செலவுகள் அவ்வப்போது உண்டாகும். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்யவேண்டியிருக்கும். உறவினர்களிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
அவர்களால் கொஞ்சம் செலவு இருக்கும். இன்று உடல் ஆரோக்கியம் நல்ல படியாகத்தான் இருக்கும். கூடுமானவரை மாலை நேரங்களில் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வார்கள். முக்கியம் மான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.