நில அளவை உட்பிரிவு, புல எல்லை அமைத்தல், மேல்முறையீடு வழங்குதல், கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் வழங்குவதற்கான கட்டணங்களை வருவாய் துறை உயர்த்தியுள்ளது. அதன்படி அளவீடு புத்தகப் பிரதி (பக்கம் ஒன்றுக்கு) A4 அளவுக்கு ரூ. 20-ல் இருந்து ரூ. 50 ஆகவும், புல அளவீட்டு புத்தகப் பிரதி ( பக்கம் ஒன்றுக்கு) A3 அளவுக்கு ரூபாய் 100 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் மக்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி இருக்கும் நிலையில், தமிழக அரசு இப்படியான உத்தரவை பிறப்பித்துள்ளது ஒட்டுமொத்த மக்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே மின் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு மீது மக்களுக்கு அதிர்ச்சியில் இருக்கும் நிலையில் தற்போது அடுத்த இடியாக நில அளவை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.