நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன்பிறகு ஊரடங்கு தளர்வு அறிவித்து மத்திய அரசு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மூடப்பட்டு இருந்த வழிபட்டு தலங்கள் ஊரடங்கு தளர்வால் திறக்கப்பட்டன.
திருப்பதி கோவிலும் திறந்து வழிபாடுகள் நடைபெற்றன. கோவிலில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அர்ச்சகர்கள் உள்ள பலருக்கும் கொரோனா ஏற்பட்டதை அடுத்து மீண்டும் திருப்பதி கோவில் அடைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து திருப்பதியில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிரதான சாலை வழியாக வந்து வந்து செல்ல தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.