அக்காள் கணவர் உட்பட பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமடைந்த 14 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 14 வயது சிறுமி தொடர்ந்து பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதில் நிறைமாத கர்ப்பமான அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் நாகை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு தகவலளித்தது.. அதனைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் மயிலாடுதுறை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின் பேரில் சிறுமியிடம் விசாரணைநடத்தியதில், சிறுமியின் அக்காள் கணவர் தினேஷ் என்பவர் தான் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை முறையற்ற உறவு வைத்திருந்ததும், இதில் சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து சிறுமியை கல்யாணம் செய்துகொண்டதும் தெரியவந்தது.
இந்தசம்பவத்திற்கு சிறுமியின் தாயார் மாரியம்மாள் உடந்தையாக இருந்ததை அறிந்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.. அதுமட்டுமில்லாமல் மேலும் பலர் சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்ததால் சிறுமியின் அக்கா கணவர் தினேஷ் மற்றும் சில நபர்கள் மீதும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் மீதும் போக்சோ சட்டம், குழந்தைகள் திருமண தடை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.