நிற ரீதியாக இழிவு படுத்த பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வலது கை வேகப்பந்து வீச்சு வீரரான ஜோஃப்ரா ஆர்ச்சர் இங்கிலாந்து நாட்டின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தந்தைக்கும் மேற்கத்திய தீவுகளின் கருப்பு இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார் மற்றும் அணிக்கு சிறந்த முறையில் பங்காற்றி வருகிறார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஜோஃப்ரா ஆர்ச்சர் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறரும் என்னை கருப்பு இனத்தை வைத்து நிற ரீதியாக இழிவு படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.இதுஎன்னை மனதளவில் காயப்படுத்தி துன்புறுத்துகிறது இவ்வாறு பதிவிட்டவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜோஃப்ராஆச்சரியம் மீது இனரீதியான கருத்துக்களை பதிவிட்டு கேலி செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுபோலவே சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் வீரரான டரால் நிறவெறி எதிர்கொண்டதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.