Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு மேல் பொறுக்க முடியாது…. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் – நடிகர் எஸ்.வி.சேகர்

தனது பெயரில் ட்விட்டரில் போலி கணக்குகளை வைத்திருப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.

 

 

சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பல போலி கணக்குகள் மூலம் கருத்துக்களை பதிவு செய்வது தொடர்ந்து வருகிறது. நடிகர் எஸ்.வி.சேகர் மிகத் தைரியமாக அவருடைய கருத்துக்களை ட்விட்டர் வலைத்தளத்தில் பதி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது .இந்நிலையில் எஸ்.வி.சேகர் பதிவிட்டது போன்ற கருத்துக்கள் போலியான கணக்குகளில் இருந்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வலம் வருகின்றது.

இதுகுறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில் “ட்விட்டரில் பக்கத்தில்  எனது பெயரில்  போலி கணக்குகளில் இருந்து சில கருத்துகள் பதிவிட படுகின்றது . நான் பலமுறை இதைப்பற்றிய புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதைப்போலவே ஊடகத் துறையினரை அவதூறாக பேசி கருத்து பதிவிட்டதாக சமீபத்தில் ட்விட்டரில் பகிரப்பட்டது.எனவே இதுகுறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப் போகிறேன்” என தெரிவித்தார்.

Categories

Tech |