Categories
கிரிக்கெட் விளையாட்டு

12 மணி நேர இடைவெளி…. இந்தியாவில் 3 , இலங்கையில் 7….. அசத்திய யார்க்கர் மன்னன்…..!!

லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித்  மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு  தனது தாயகமான இலங்கைக்கு  சென்றார்.

Image result for 15 hours, 2 countries, 10 wickets: Lasith Malinga does the unthinkable after claiming 10/83 within two days

இலங்கையில்  நேற்று காலையில்  பல்லகெலேவில் நடைபெற்ற  உள்ளூர் ஒரு போட்டியில் மலிங்கா பங்கேற்றார். காலே மற்றும் கண்டி அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில், காலே அணிக்கு  கேப்டனாக மலிங்கா அணியை வழி நடத்தினார். முதலில் பேட்டிங் செய்த  காலே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில்  256 ரன்கள் குவித்தது. அதன் பின்  இலக்கை நோக்கி துரத்திய  கண்டி அணி  18.5 ஓவர்களில் 99 ரன்களுக்குள் சுருண்டு தோல்வி அடைந்தது.

Image result for 15 hours, 2 countries, 10 wickets: Lasith Malinga does the unthinkable after claiming 10/83 within two days

காலே அணியின் கேப்டன் லசித் மலிங்கா 9.5 ஓவர்கள் பந்து வீசி 49 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதனால் 12 மணி நேர இடைவெளியில் 2 நாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டியில் களம் கண்ட லசித் மலிங்கா மொத்தம் 10 விக்கெட்டுகளை சாய்த்து அனைவரையும் பிரமிக்க வைத்திருக்கிறார்.

 


 

 

Categories

Tech |