இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் ‘சிறந்த எதிர்காலத்தை கட்டமைத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் உரைபிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பு, கொரோனா பேரிடருக்கு பிந்தைய பொருளாதார மீட்பு குறித்து பேசினார். பிரதமருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் மாநாட்டில் பங்கேற்ற்றுள்ளார்.
இந்தியா வேளாண் சந்தையில் உள்ள வாய்ப்புகளை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா வாய்ப்புகள் நிறைந்த தேசமாக உள்ளது. மருத்துவத்துறையில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 22% வளர்ச்சி அடைந்து வருகிறது”. உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் உலக பொருளாதார எழுச்சிக்கு வித்திடலாம்.
உலகிற்கு சிறப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது!” வாய்ப்புகள் அதிகம் நிறைந்த நாடாக இந்தியா மிளிர்ந்து வருகிறது. இந்தியாவில் நகர்ப்புறங்களை விட, கிராமப்புறங்களில் இணையதளத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.சுயசார்பு திட்டத்தின் மூலம் இந்தியா உலகிற்கு பெரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி தந்துள்ளது.டிஜிட்டல் மயமாக்குதல், ஆரோக்கியமான போட்டியை ஊக்குவித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம் என்று பேசினார்.