பிரித்தானிய நாட்டில் நாய்ப்பட்டை இறுகியதால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய நாட்டில் இரு நாய்களுக்கு நடுவில் கழுத்தில் நாய்ப்பட்டையினை இறுக மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய பெண்ணை அங்கு வந்த சிறுமி பார்த்துள்ளார். வட வேல்ஸிலுள்ள Wrexham என்ற இடத்தில் கிடந்துள்ள பெண்ணை பார்த்ததும், அச்சிறுமி அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த இரு நபர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அச்சமயத்தில் இருவரும் விரைவாக வந்து Deborah Mary Roberts என்ற 47 வயதுடைய அப்பெண்ணை பார்த்ததும் மருத்துவ உதவி குழுவினருக்கு அழைப்பு தெரிவித்தனர்.
உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் வந்தும் எவ்வளவோ முயற்சி செய்தும் அப்பெண்ணினை காப்பாற்ற இயலவில்லை. இந்நிகழ்வு எப்படி நடந்தது என்றால், Deborah பெண் இரு நாய்களையும் அழைத்துக்கொண்டு நடைப்பயிற்சி செய்திருக்கின்றார். அப்போது எதிர்பாராத விதமாக நாய்களின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு பெண்ணின் கழுத்தில் சுற்றிக்கொண்டது. பின்னர் இரு நாய்களும் எதிரெதிர் திசையில் இழுக்க செய்ததால் கழுத்தில் சுற்றப்பட்ட கயிறு இறுகி மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் இறந்துள்ளார். இத்தகைய சம்பவமானது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.