Categories
உலக செய்திகள்

குளியலறையில் நீளமான முடி… கணவருக்கோ தலை வழுக்கை… அப்போ அது யாருடையது?.. விடுப்பு எடுத்து வீட்டுக்கு வந்தபோது திகைத்துப்போன மனைவி..!!

பணியிலிருந்து அரைநாள் விடுப்பு எடுத்து வீட்டிற்கு வந்த மனைவி கண்ட காட்சி அவரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது வீட்டு குளியலறையில் மிகவும் நீளமான முடி இருப்பதை கண்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் காரணம் அவரது   கணவருக்கு தலை வழுக்கை அதோடு அந்த பெண்ணிற்கு குட்டையான முடி, நீளம் மிகவும் குறைவு. இதனால் மிகுந்த வேதனை அடைந்த மனைவி அன்பான கணவனை கேமராவை வைத்து வேவு பார்ப்பதற்கு மனமில்லாமல் உண்மையை கண்டறிய என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து உள்ளார். இந்நிலையில் அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அந்தப் பெண் அப்போது வீட்டு வாசலில் யாராவது இருக்கிறர்களா  என்று பார்த்தார்  அப்படி யாரும்  இல்லை என்பதை உறுதி செய்து விட்டு வீட்டின் உள்ளே நுழைந்தார். அச்சமயம் வாசலில் ஒரு ஜோடிஷூ கிடந்ததை கண்டு யாருடையதாக இருக்கும் என யோசித்துக் கொண்டே உள்ளே சென்ற மனைவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது கணவர் சமையலறையிலிருந்து இரண்டு தேநீர் கோப்பையுடன்  வெளியில் வந்தார். கணவன் மனைவியை கண்டு வியக்க அந்தப்பெண் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நான் வருவேன் என்று தெரிந்து தேநீர் தயார் செய்தீர்களா என கிண்டலாக கேட்பதுபோல் பேசிக்கொண்டிருக்க அச்சமயம் குளியல் அறையின் கதவு திறந்தது.குளியல் அறையில் இருந்து வந்த நபரை பார்த்த பெண்ணிற்கு மேலும் அதிர்ச்சி அதிகரித்தது. காரணம் அது அவள் கணவனின் நெருங்கிய நண்பர்.

பின்னர் பெண்ணின் கணவன் நடந்தவற்றை மனைவியிடம் கூறினார். அவர்க்கு வேலை பறிபோய் விட்டது என்றும் தனது சொந்த காலில் நிற்கும் வரை தனது வீட்டுக்குள்ளேயே குளியலறையை பயன்படுத்திக் கொள்வதற்கு கேட்டதாகவும் இந்த விஷயம் நண்பனின் மனைவிக்கு தெரிந்தால் அவமானம் என்று நினைத்து அதன் காரணமாகவே இவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார். பெண்ணின் கணவருடைய நண்பருக்கு மிகவும் நீண்ட தலை முடியும் தாடியும் உள்ளது பின்னர் அப்பெண் குழப்பம் நீங்கி தெளிவு அடைந்தாள். இறுதியாக வீட்டிற்கு வரும்பொழுது இப்படி ஒளிந்து வரவேண்டாம் அவருக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கும் வரை நம் வீட்டிலேயே  உங்கள் நண்பர் தங்கிக் கொள்ளட்டும் என அந்தப் பெண் கூறியுள்ளார்.

Categories

Tech |