Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் இந்த நாட்டில் தான் நடைபெறும் – வெளியான அறிவிப்பு..!!

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. ஐபிஎல் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்..

இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் இன்று மதியம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா சூழ்நிலையை  கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும் என்றும், எதுவாக இருந்தாலும் போட்டியை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என்றும் தெரிவித்திருந்தார்..

மேலும் ஐபிஎல் தொடரை நடத்துவது பற்றி மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இன்னும் 10 நாட்களில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கும்.. இல்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டுக்கான  ஐபிஎல் போட்டி நடக்கும்.. இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்..

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2020 இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று  ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.. மேலும் அரசாங்கத்தின் அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளோம். ஐபிஎல் பொதுக்குழுவில் மேற்கொண்டு நடவடிக்கை குறித்து விவாதிப்போம். துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம்.. போட்டி அட்டவணை குறித்து  விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார். அனுமதி கிடைத்தால் களைகட்டத் தொடங்கி விடும் ஐபிஎல் திருவிழா…

Categories

Tech |