Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்த சஷ்டி சர்சை: போலீஸ் அதிரடி முடிவு …!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது.

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் மனு  தாக்கல் செய்து இருக்கிறார்கள். அந்த மனு மீதான விசாரணை நாளைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பது இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களைத் திரட்டுவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கறுப்பர் கூட்டம் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிக்க இந்த 5 நாட்கள் போலீஸ் காவலில் தேவை என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு உள்ளனர். அதேபோல் இந்த வழக்கில் மேலும் சிலர் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. எனவே அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரிக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |