மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியை “மான் கட்” முறையில் ஆட்டமிழக்க செய்ய முயற்சி செய்து குருனால் பாண்டியா ஏமாற்றமடைந்துள்ளார்.
15-ஆவது ஐ.பி.எல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடியது . இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 59 (43), க்ருனால் பாண்டியா 42 (32), ஹர்திக் பாண்டியா 25 (8), பொல்லார்டு 17 (7), ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேதார் ஜாதவ் 58 (54) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் இந்த வெற்றி மூலம் சென்னை அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியின் பேட்டிங்கின் போது 14 ஓவரை குருனால் பாண்டியா வீசினார். அப்போது அந்த ஓவரில் ஒரு பந்தை கேதார் ஜாதவ் எதிர் கொண்டார். அப்போது எதிரே ரன்னராக நின்ற கேப்டன் தோனி கிரீஸுக்கு வெளியே செல்வதாக நினைத்துக்கொண்டு அவரை “மான் கட்”முறையில் அவுட் செய்ய முயன்றார். ஆனால் கேப்டன் தோனி கிரீஸுக்கு வெளியே நின்றாலும் அவர் பேட் உள்ளே இருந்ததால் ஏமாற்றமடைந்தார்.
https://twitter.com/Seithi_solai/status/1113751498800762880