ராகுல் காந்தி எப்பொழுதும்போல் சேற்றை வாரி இறைத்து, ராணுவம் மற்றும் நாட்டின் வெளியுறவு கொள்கையை அவர் அரசியலாக்க முயற்சி செய்வதாக பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா பதிலடி கொடுத்திருக்கிறார்.
பிரதமர் மோடி தனது செல்வாக்கை காப்பாற்ற லடாக் எல்லையில் இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று கூறுவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி இருக்கிறார். இந்த குற்றசாட்டுக்கு பாரதீய ஜனதா தலைவரான ஜே.பி.நட்டா டுவிட்டரில் பதில் கொடுத்துள்ளார். அதில் ராகுல் காந்தி வழக்கம் போல் சேற்றை வாரி வீசியுள்ளதாகவும், ராணுவம் மற்றும் நாட்டின் வெளியுறவு கொள்கையை அவர் அரசியலாக்க முயற்சி செய்வதாக அவர் கூறி இருக்கிறார். நாட்டு மக்களின் நலனுக்கு பாடுபடும் பிரதமர் மோடியின் செல்வாக்கை அழிப்பதற்கு நினைப்பவர்கள், தங்களுடைய சொந்த கட்சியையே அழித்துக் கொள்வார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.