Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்… அனுமதி கேட்டுள்ளோம்… பிசிசிஐ கோரிக்கை..!!..!!

ஐபிஎல் தொடர் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்..

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருக்கின்றன.. இதில் முக்கியமாக இந்தியாவில் ஆண்டுதோறும் திருவிழா போல நடத்தப்படும் ஐபிஎல் போட்டியும் அடங்கும்.. ஐபிஎல் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்..

இந்த நிலையில் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா சூழ்நிலையை  கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும் என்றும், எதுவாக இருந்தாலும் போட்டியை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை என்றும் தெரிவித்துள்ளார்..

மேலும் ஐபிஎல் தொடரை நடத்துவது பற்றி மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். இன்னும் 10 நாட்களில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்கும்.. இல்லை என்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டுக்கான  ஐபிஎல் போட்டி நடக்கும்.. இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்..

கொரோனா பாதிப்பு என்பது இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சுமார் 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த சூழலில் இந்தியாவில் ஐபிஎல் நடைபெற்றால் கொரோனா தாக்கம் அதிகரிக்க கூடும் என்ற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஐபிஎல் நிர்வாகம் மத்திய அரசிடம் முழுமையாக அனுமதி கேட்டு வெளிநாடுகளில் போட்டியை  நடத்த திட்டமிட்டுள்ளது.

Categories

Tech |