Categories
சினிமா

கஸ்தூரி குறித்து வனிதா ட்விட்…. “பயந்துட்டியா குமாரு” பதிலடி கொடுத்த கஸ்தூரி…!!

நடிகை வனிதாவுக்கும்  கஸ்தூரிக்கும் இடையே இணையத்தளத்தில் மோதல் ஏற்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர் பால் என்ற நபரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இதைக் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் தன் விமர்சனங்களை தெரிவித்திருந்தார். அப்போது வனிதா தன் சொந்த வாழ்க்கையில் எவரும் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கடுமையாக கண்டித்து கூறியுள்ளார். இத்தகைய பிரச்சனை முடிவடைந்த நிலையில் தற்போது நடிகை கஸ்தூரிக்கும் வனிதாவுக்கும் வலைத்தளங்களில் கடுமையான மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இதைக் குறித்து நடிகை கஸ்தூரி வெளியிட்ட தகவலில், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களை நினைக்கையில் தனக்கு இதயத்தில் ரத்தம் வடிகிறது. வனிதாவின்  செயல்கள் அனைத்தும் மிக மோசமாகவும், இணையத்தள துஷ்பிரயோகம் செய்வதாகவும்  இருக்கிறது.

இத்தகைய கேள்விக்கு பதில் கூறிய வனிதா, ” என் சொந்த வாழ்க்கையில் எவராவது தலையிட முயற்சி செய்தால் அவர்களின் வாழ்க்கையை ஆதாரங்களுடன் வெளியிடுவேன்” என்று கூறினார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, “தனக்கு வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் மட்டுமே உள்ளது என்றும் என் சொந்த வாழ்க்கையைப் பற்றி பேசுவதில் எத்தகைய பயனுமில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தங்களைப் போல் சீசன் 1 2 3 போன்று மெகா சீரியல் வாழ்க்கையை நான் வாழவில்லை. நீங்கள் வாழ்வில் தோல்வி அடைந்தவர் என்றும் உங்களைப் பிரபல படுத்திக்கொள்ள என்னை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்றும் கண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து எனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து கஸ்தூரி அவர்களை பிளாக் செய்கிறேன் என்றும், ‘காமெடி பீஸ்’ என்றும் வனிதா குறிப்பிட்டுள்ளார். அச்சமயத்தில் ‘பயந்துட்டியா குமாரு’ என கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார். மேலும் இவர்களுடைய மோதல் ஆனது இணையத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |