கொரோனாவால் பாதிக்கப்பட்ட தங்கையை அண்ணன்கள் வீட்டிற்குள் அனுமதிக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டை அருகே இருக்கும் தூர்ப்பு பள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரமணம்மாள் (42). இவர் சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக இவர் சமீபத்தில் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்குப்பின் ரமணம்மாள் நெல்லூரில் கலவாயி பகுதியில் இருக்கும் தனது உடன் பிறந்த அண்ணன்கள் வீட்டிற்குச் சென்றுருக்கிறார்.
ஆனால் அண்ணன்ங்கள் தங்கை என்று பாராமல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக ரமணம்மாளை தங்கள் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் ரமணம்மாள் மருத்துவமனைக்கும் செல்ல முடியாமல் அண்ணன்கள் வீட்டிற்கும் செல்ல முடியாமல், ஊருக்கு வெளியில் இருக்கும் ஒரு மரத்தடியில் தங்கியுள்ளார். இதை அறிந்த கடப்பா மாவட்டத்தின் வருவாய்த் துறையினர் நேற்று ரமணம்மாளை அங்கிருந்து மீட்டு, கடப்பா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்துள்ளனர்.