Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…செயல்திறன் அதிகரிக்கும்…வெற்றி உண்டாக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   இன்று வேண்டாத நபரை ஒரு முக்கியமான இடத்தில் சந்திக்க நேரலாம். நீங்கள் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்திலும் பொறுமை காக்க வேண்டும். உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாக செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் ஏதும் செய்ய வேண்டாம். வெற்றி கிடைக்கும். நம்பிக்கைக்குரிய காரியங்கள் அனைத்துமே ஓரளவு காலத் தாமதமாக நடந்து முடியும். ஆனால் அதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள். உங்களுடைய கடமை நீங்கள் சிறப்பாகவே செய்யுங்கள்.

சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கவும். மனதை நீங்கள் அமைதியாக வைத்துக் கொண்டாலே அனைத்து விஷயங்களிலும் வெற்றி ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரவு தாமதப்பட்டாலும் வந்து சேரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து எதுவும் போடக்கூடாது. மிக முக்கியமாக வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கக் கூடாது. அது போலவே வாகனத்தில் செல்லும்போதும் பொறுமையாகத்தான் செல்ல வேண்டும். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை எண்ண வேண்டாம்.அடுத்தவரின் உதவிகள் ஓரளவு கிடைக்கும்.

புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். உங்களுடைய செயல்திறன் அதிகரிக்கும். பெண்கள் எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மையை கொடுக்கும். காதலர்கள் இன்று பேச்சில் கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |