Categories
உலக செய்திகள்

இனவெறி தாக்குதல்… காதலனுடன் சென்றபோது… இளம்பெண் மீது துப்பிய இளைஞன்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

இளைஞனொருவன் இனவெறியை தூண்டும் வகையில் பெண்ணின் மீது எச்சில் துப்பியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி கைது செய்யப்பட்டுள்ளார்

கனடாவில் இருக்கும் கால்கரி அருகே அமைந்துள்ள பூங்காவிற்கு ஜெசிக்கா என்ற இளம்பெண் தனது காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அவரது காதலன் ஜெசிக்கா ஸ்கேட்டிங் போர்டில் செல்வதை வீடியோவாக எடுத்து கொண்டிருந்தார். அந்நேரம் ஜெசிக்காவிற்கு எதிராக சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவன் ஜெசிக்காவின் அருகில் வந்ததும் மிகவும் மோசமாக இனவெறியை தூண்டும் வகையில் அவர்மீது எச்சில் துப்பி விட்டு கடந்து சென்றுள்ளான்.

இச்சம்பவம் காதலன் எடுத்த வீடியோவில் பதிவாக அந்த இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டான். இச்சம்பவம் குறித்து ஜெசிக்கா கூறுகையில் எனது வாழ்வில் நான் சந்தித்த முதல் இனவெறித் தாக்குதல் இதுவே. இதன் பிறகு நான் முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |