Categories
உலக செய்திகள்

1072பேரிடம் சோதனை…. 10 கோடி தடுப்பூசி ஆர்டர்….. தடுப்பு மருந்து வெற்றி …!!

ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு மிக முக்கியமான வெற்றி செய்தி கிடைத்திருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிசோதனை விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி 1077 பேருக்கு நடத்தப்பட்டுபரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா வைரஸ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் தெரிகிறது.

உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட தடுப்பூசி பரிசோதனை நடைபெறுகின்றன. இந்த நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினுடைய இந்த முயற்சியானது தற்போது வெற்றிபெற்றுள்ளது.  மேலும் சில தகவல்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் இந்தப் பரிசோதனையானது நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருப்பதன் காரணமாக பிரிட்டன் அரசானது 10 கோடி தடுப்பூசி டோஸ்களுக்கு ஆர்டர் செய்துள்ளது.

இதன் மூலமாக கூடிய விரைவில் கொரோனாவுக்கு ஒரு தடுப்பு மருந்து விரைவில் உலகத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தடுப்பு மருந்து சோதனையில் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கின்றன. அதனுடைய தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆகிய இந்த இரு தடுப்பு மருந்துகளும் கூடிய விரைவில் உலகில் கிடைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |