நாடு முழுவதும் இருக்கின்ற ஏழை எளிய மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், முதல் நிலை பட்டதாரிகள் என மத்திய மாநில அரசுகள் பல்வேறு விதமான சலுகைகளை அறிவித்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சென்னை பல்கலைக் கழகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. விவசாய கூலி வேலை செய்யும் பெற்றோர், முதல் தலைமுறை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் www.unom.ac.in தளத்தில் 22ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.