Categories
இந்திய சினிமா சினிமா

மீண்டும் ஒரு முக்கிய வேடம்…. நடிகை சமந்தாவிற்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு…!!

மீண்டும் நடிகை சமந்தா கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையிலும் சமந்தா திரையுலகில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் காதல் திரைப்படங்களில் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-டர்ன் ,ஓ பேபி போன்ற கதாநாயகியை மையப்படுத்திய கதை களம் கொண்ட படங்களில்  ஆர்வத்துடன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய நடிகை சமந்தாவிற்கு தற்போது மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆந்திராவில் நாகரத்னம்மா என்ற சமூக சேவையாளரின்  சுயசரிதையை  திரைப்படமாக எடுக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில் நடிகை சமந்தாவை  இந்த படத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனர் என்றும் இதுகுறித்து சமந்தாவிடம் பேசிக்கொண்டு வருவதாகவும்  கூறப்படுகிறதது. நடிகை சமந்தா கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடிப்புத் திறமையை இன்னும் மெருகேற்றி வருகிறார். இத்திரைப்படத்தில் வசனம்,உடல் மொழி போன்ற மாற்றங்களை நடிகை சமந்தாவிற்காக  தான் செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |