Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிராக கருத்து… பணியிடை நீக்கப்பட்ட பேராசிரியர்..!!

சீன அதிபருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்த சிங்குவா பல்கலைக்கழக பேராசிரியர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியராக பணிபுரிந்த ஜூ சாங்ருன். இவர் அதிபர் ஜின்பிங் தலைமையில் நடந்து வரும் அரசை வெளிப்படையான முறையில் விமர்சித்து வருகிறார். சீனாவில் கொரோனா பரவிய காலங்களில் அதிபர் ஜின்பிங் செய்த மோசடிகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் குறித்து ஜூ சாங்ருன் சென்ற பிப்ரவரி மாதம் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த கட்டுரையில் “நாட்டில் தொடர்ந்து நிலவும் பொருளாதார நிலை சரிவு, அரசியல் கல்வி மற்றும் சமூக சீர்குலைவு, நாட்டின் மீதான நம்பிக்கையும் வீழ்ச்சியையும்  ஏற்படுத்தும்” என்று அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியிருந்தார். மேலும் அதிபர் பதவியில் ஜின்பிங் நீடித்து இருப்பதற்கு எதிராகவும் தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.

இந்த கட்டுரை வெளிவந்து பல சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஜூ சாங்ருன் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவி உள்ளது. இது பற்றி உறுதியான தகவல்கள் எதும் வெளிவரவில்லை. இதற்கிடையில் அதிபர் மற்றும் அவரது அரசை தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததற்காக பேராசிரியர் ஜூ சாங்ருனை சிங்குவா பல்கலைக்கழகம் வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இது பற்றி  பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தியில்,” மத்திய கல்வி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை மீறி அரசுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்ததால் பேராசிரியர் இடைநீக்கம் செய்யப் படுகிறார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
57 வயது கொண்ட  ஜூ சாங்ருன் 20 வருடங்களுக்கு மேல் சிங்குவா  பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

Categories

Tech |