Categories
உலக செய்திகள்

கன மழையால் வெள்ளம்…வெடிகுண்டு வைத்து அணையை தகர்த்த சீனா..!!

சீனாவில் சுஹே ஆற்றில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் அதன் குறுக்கே கட்டப்பட்டிருந்த அணையை சீன அரசு வெடிகுண்டு வைத்து தகர்த்தெரிந்தது.

கொரோனா வைரஸில் இருந்து மீண்ட சீனா தற்போது கடும் மழை வெள்ளத்துக்கு ஆளாகியிருக்கிறது. வூஹானில் உள்ள யாங்சே உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய அணையினுடைய  நீர்மட்டம் 15 மீட்டருக்கு மேல் உயர்ந்து இருப்பதால் ஆற்றின் குறுக்கே  கட்டியிருந்த அணைகளில் மூன்று மதகுகள் சென்ற வாரம் திறக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்ஹூய் மாகாணத்தில் பெய்து வரும் தொடர் கன மழையினால் யாங்சே ஆற்றின் கிளை ஆறாக இருக்கும் சுஹே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து இருப்பதால் அதன் அழுத்தத்தை குறைக்க இதன் குறுக்கே கட்டப்பட்ட  அணையானது வெடிகுண்டு வைக்கப்பட்டு தகர்த்து வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

Categories

Tech |