தனுசு ராசி அன்பர்களே …! இன்று எதையும் முன் யோசனையுடன் தான் செய்ய வேண்டியிருக்கும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சில மாற்றங்களையும் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் மட்டும் தயவு செய்து தள்ளிப் போட்டு விடுங்கள். அளவான பணவரவு கிடைக்கும். எதையும் பயன்தராத பொருட்களை தயவுசெய்து விலைக்கு வாங்க வேண்டாம். செலவை கட்டுப்படுத்துவதற்கு கண்டிப்பாக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு மூலம் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடப்பதன் மூலமும் காரியத்தில் அனுகூலமும் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தையும் செய்து முடியுங்கள். எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னேற்றம் அடைய நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். யாருக்கும் வாக்குறுதியில் ஏதும் கொடுக்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். பணம் நான் பெற்றுத் தருகிறேன் என்று எந்த பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். அது போலவே நிதி மேலாண்மையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.
மற்றவர்களுக்கு உதவ பிரச்சினை உண்டாகும். அரசியல் துறையினர் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும், கௌரவம் பாதிக்கும் படியான சூழல் இருக்கும். அதனால் பேச்சில் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள். காதலர்கள் எந்தவித பாகுபாடும் கண்டிப்பாக ஈடுபடக்கூடாது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாம இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.