போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த பொழுது இளைஞன் லேசர் லைட்டை கண்ணில் அடித்ததால் பார்வையை இழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் உள்ள சூரிச் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட லேசர் துப்பாக்கியை கொண்டு இளைஞர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியின் கண்ணில் தாக்கியுள்ளார். அந்த அதிகாரி பார்வை இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஒரு வீட்டின் முன் இரண்டு இளைஞர்கள் இருந்தனர். திடீரென ஒரு இளைஞர் லேசர் துப்பாக்கியை உபயோகித்த போலீஸ் அதிகாரிகளை குறி வைத்துள்ளார்.
இச்சம்பவத்தால் ரோந்து வாகனத்தில் இருந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் தன் பார்வையை இழந்துள்ளார். அதன்பின் சம்பவ இடத்திலேயே இளைஞரை போலீஸார் கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட அதிகாரி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இந்த தாக்குதலால் போலீஸ் அதிகாரிக்கு நிரந்தர கண் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தெரியவில்லை.