Categories
தேசிய செய்திகள்

இந்து மதத்தை இழிவாக பேசுவோருக்கு குண்டர் சட்டம்-சரத்குமார் அதிரடி அறிக்கை வெளியீடு ..!!

இந்து மதம் பற்றி தவறாக பேசுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். 

இந்து மதத்தை பற்றி இழிவாக பேசுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,” உதவி செய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தர வேண்டாம் என்பது பழமொழி. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கடைபிடிக்கும் கலாச்சாரம் தெய்வ வழிபாட்டை கொச்சைப்படுத்துவோருக்கு கொடுக்கப்படும் தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கும் யாரும் வாய் திறக்காமல் நம் இந்துக் கடவுளை விமர்சிக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டும்.

எந்த மதத்தையும் இழிவுபடுத்தக் கூடாது என்ற எண்ணத்தோடு வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள்தான். ஒரு வாதத்துக்கு கேட்கிறேன், இவர்களில் யாருக்காவது மற்ற மதத்தை அந்த மதபோதனைகளை விமர்சிப்பதற்கு தைரியம் உள்ளதா? இந்து மதத்தை இழிவு படுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் தொடர்ந்து விமர்சிக்கும் கூட்டத்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறிபட்டிருக்கிறது.

Categories

Tech |