தனுசு ராசி அன்பர்களே …! இன்று எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் மனதார உங்களை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். ஆதாய பணவரவு வந்து சேரும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். கலைத் துறையை சார்ந்தவர்கள் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியம் நல்லபடியாக தான் நடக்கும்.
ஆராய்ந்து செய்யும் காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும். வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். வீண் செலவுகள் கொஞ்சம் இருக்கும். மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். எப்போதுமே உங்கள் வேலையை நீங்கள் திறம்பட செய்வீர்கள். இன்று காதலுக்கு ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும்.
தேவையில்லாத விஷயங்களில் பேசிக் கொண்டு வாக்குவாதத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளாமல் இருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் ஓரளவு நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.