ஒரு வருடத்திற்குள் தன்னை முதலமைச்சராக அறிவிக்க வேண்டுமென சச்சின் பைலட் கோரிக்கை வைத்ததாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் முதல் மந்திரியாக உள்ள அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்-மந்திரியாக உள்ள சச்சின் பைலட்டுக்கும் இடையில் அதிகார மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியில் உள்ள சச்சின் பைலட்டும் அவருடைய ஆதரவாளர்கள் இரண்டு பேரும் மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தனக்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார். ராஜஸ்தான் அரசினை தவிர்ப்பதற்காக பாரதிய ஜனதா கட்சி சச்சின் பைலட் உடன் சேர்ந்து முயற்சி எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் கூறியுள்ளது. முதல் மந்திரி அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜெய்ப்பூரில் இருக்கின்ற விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் அரியானா மாநிலத்தில் உள்ள மனேசரில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி அவர்கள் வதேராவுக்கு நெருங்கிய வட்டாரத்திடம் கூறியுள்ளார். சச்சின் பைலட் அவர்கள் ஒரு ஆண்டிற்குள் தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். தன்னை முதல்வர் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் உள்ளார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் வாக்குறுதி அளிக்க தவறியதால் அவர்களை நேரில் சந்திப்பதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று சச்சின் பைலட் மறுப்பு கூறிவிட்டார். சச்சின் பைலட் உடன் 3 மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசியில் உரையாடிய பிறகு பிரியங்கா அவரின் பதவி நீக்கம் பற்றிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பைலட்டின் இத்தகைய கோரிக்கையை காங்கிரஸ் தலைமைக்கு அறிவித்த பின்னர்தான் அவரை ராஜஸ்தானின் துணை முதல்வர் பதவியில் இருந்தும் மாநில பிரிவின் தலைவர் பதவியிலிருந்தும் நீக்குவதற்காக முடிவு எடுக்கப்பட்டது என வட்டாரங்கள் கூறியுள்ளனர். மேலும் இதனை தொடர்ந்து பைலட் பல கருத்துக்களை கூறியுள்ளார். “காங்கிரஸ் எனக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சமரசத்தை பற்றி எப்படி பேச முடியும்?” காங்கிரஸின் உத்தரவாதங்களை இனி என்னால் எப்படி உறுதியாக நம்ப முடியும்? என்றும் “ஒருபுறம் காங்கிரஸ் கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் நான் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக நோட்டீஸ் அனுப்பி வைக்கின்றனர்” என்றும் கூறியுள்ளார். அதேசமயத்தில் அசோக் கெலாட் என்பவரால் நான் மிகவும் தாக்கப்பட்டு கொண்டிருக்கின்றேன் என பைலட் தனது கருத்தை கூறி இருக்கின்றார்.