தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வந்தநிலையில், கடந்த சில நாட்களாக அங்கு பாதிப்பு குறைந்து வருகிறது. சென்னையில் தளர்வுகள் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்படதன் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டது.
ஆனால் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் 245 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 8,103 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 228 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிப்பு 2,224 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேபோல இன்று விழுப்புரம் மாவட்டத்தில் 130 பேருக்கும், நெல்லை மாவட்டத்தில் 93 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.