இந்தியாவில் ஒரு இன்ச் நிலப் பகுதியைக் கூட எந்த சக்தியாலும் தொடமுடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் இந்தியா-சீன ராணுவம் வீரர்களுக்கு இடையே எல்லையில் மோதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதனால் இந்திய மக்கள் கொந்தளித்து boycott சைனீஸ் ப்ராடக்ட் என்ற விஷயத்தை முன்னிறுத்தி பல போராட்டங்களை நடத்தி வந்தனர். அதேபோல் 59 சீன செயலிகள் நாட்டின் தகவல்பபாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் அதற்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இப்படி சீனாவுக்கு எதிராக ஒவ்வொரு நடவடிக்கையாக அரசும், இந்திய மக்களும் மேற்கொண்டு வரும் சமயத்தில், தற்போது லடாக் எல்லை பிரச்சனை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் ஒரு இன்ச் நிலப் பகுதியைக் கூட உலகில் இருக்கக்கூடிய எந்த சக்தியாலும் தொட முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும் லடாக் எல்லைப் பிரச்சினை தொடர்பாக சீன ராணுவ அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினை முழுமையாகத் தீர்ந்துவிடும் என்று உறுதியளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.