தனுசு ராசி அன்பர்களே …! அதிகாலையிலேயே உங்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் கிட்டும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து முடியும். பயணங்கள் நல்ல பலனையே கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையில் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம்.
வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உறவினர் வகையில் உன்னதமான சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தின் அன்பு பரிபூரணமாக கிடைக்கும். புதிதாக காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். முக்கியமான விஷயங்களை கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அதேபோல் யாருக்கும் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்காதீர்கள்.
இன்று காதலர்கள் கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் கலந்த எல் சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.