Categories
அரசியல்

15 மாவட்டங்களில் முழு ஊரடங்கு ? – பரபரப்பு …!!

கொரோனா அதிகம் உள்ள 15 மாவட்ட ஆட்சியருடன் இன்று மாலை தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஆலோசனை நடத்த உள்ளார்.

கடந்த சில நாட்களாக சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசும், தமிழக சுகாதாரத்துறையும் மேற்கொண்டு வருகிறது.  மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதே போல் மாநகரப் பகுதிகளிளும் தடுப்பு பணிகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனவை கட்டுப்படுத்துவது, தடுப்பு பணிகளை வேகப்படுத்துவது தொடர்பாக அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளரும், முதல்வரும் ஆலோசனை நடத்துவார்கள். அந்தவகையில் கொரோனா உள்ள மதுரை, திருவண்ணாமலை, வேலூர், தேனி, திருச்சி உள்ளிட்ட 15 மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை காணொளி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார்.

இதில் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது ? போதுமான மருத்துவ வசதி உள்ளதா ?  என்னென்ன வசதிகள் தேவைப்படுகின்றன ? ஊரடங்கு கட்டுப்பாடு எந்த அளவுக்கு இருக்கின்றது ? ஊரடங்கு தளர்வில் மேலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரலாமா ? அல்லது சென்னையைப் போல முழு ஊரடங்கு பிறப்பிக்கலாமா ? என்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் ஆலோசித்து, தமிழக அரசு சார்பில் மாலை ஏதேனும் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |