மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது
12வது ஐ.பி.எல் தொடரின் 15-ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன . இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக்கும், ரோஹித் சர்மாவும் களமிறங்கினர். அதன் பின் டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ரோஹித் சர்மா 13, யுவராஜ் சிங் 4 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து சூரியகுமார் யாதவும், க்ருனால் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து பொறுப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர். அதன் பின் க்ருனால் பாண்டியா 42 (32) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின் அரைசதம் அடித்த சூரியகுமார் யாதவ் 59 (43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த பொல்லார்டும், பாண்டியாவும் பிராவோவின் கடைசி ஓவரில் ருத்ர தாண்டவம் ஆடி 29 ரன்கள் குவித்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா 25(8) ரன்னிலும், பொல்லார்டு 17 (7) ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் தீபக் சாஹர், மோஹித் சர்மா, இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.