இந்தியாவின் மருத்துவ நிறுவனத்தால் உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
டிஸ்கவரி பிளஸில் நடந்த கொரோனா தொற்றுக்கான “இந்தியாவின் போர்” என்கின்ற ஆவணப்படம் ஒன்றில் பேசிய மைக்ரோசாஃப்ட் நிறுவனரும் உலகின் பெரிய கோடீஸ்வரர் ஆன பில்கேட்ஸ் அவர்கள் தனது கருத்துக்களை கூறினார்.அதில் இந்தியாவானது மிகுந்த மக்கள் தொகையையும், நகர்ப்புற மையங்களின் சுகாதார நெருக்கடியையும் பெரிய சவாலாக எதிர்கொண்டு வருகிறது.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல முக்கிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இறப்பு வீதத்தை குறைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்தியாவானது மருத்துவ தொழிலில் “கொரோனா வைரஸ்-கான தடுப்பூசி தயாரிப்பிற்கு மற்ற நோய்களுக்காக பயன்படுத்திய மிகுந்த திறனையே இதற்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்திய அரசுடன் சேர்ந்து உத்திரப்பிரதேசம் பீகார் மாநிலங்களில் எனது அறக்கட்டளையின் மூலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி மேற்கொண்டுளோம். அதே சமயத்தில் இந்தியாவின் மருந்து நிறுவனத்தால் முழு உலகிற்கும் தடுப்பூசிகளை தயாரிக்க முடியும் என கூறியுள்ளார். இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் தொடங்கி அனைத்து மருத்துவத்துறையிலும் நிறைய திறன்கள் உள்ளன. அதுமட்டுமன்றி மற்ற தடுப்பூசி நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு அதிக அளவு தடுப்பூசிகள் உலகம் முழுவதற்கும் தயாரிக்கப்படுவது தங்களுக்கு அறிந்ததே. இந்தியாவானது உலக அளவில் தடுப்பூசி தளங்களை அமைக்க தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புக்கான கூட்டணியில் தற்போது இணைந்திருக்கிறது என கூறியுள்ளார்.