தமிழகத்தின் 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டதை அடுத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள், விவசாயிகள், வணிகர்கள், வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு தனி மாவட்டம் அமைக்க கோரி இன்று பிரம்மாண்டமான கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதனடிப்படையில் கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் இன்று முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது புது மாவட்டம் அமைக்க கோரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன தமிழக அரசின் சார்பில் 37 மாவட்டம் மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டது.