இனிய முகத்துடன் பெண்களுக்கு வணக்கம் கூறி பின்னர் கொடூரமாக வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
ஜெர்மனியில் நபரொருவர் இளம்பெண்களுக்கு இன்முகத்துடன் வணக்கம் சொல்லி பின்னர் மிகவும் கொடூரமாக அவர்களை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. ஜூன் 12 க்கு பிறகு பெர்லின் மற்றும் அதன் சுற்றியிருக்கும் பகுதிகளில் எட்டு பெண்கள் அந்த நபரிடம் சிக்கியுள்ளனர். அடர்ந்த புதர்கள் இருக்கும் பகுதியின் அருகே செல்லும் பெண்களுக்கு இனிய முகத்துடன் அந்த நபர் வணக்கம் கூறி பின்னர் மிகவும் கொடூரமாக அவர்களை வன்கொடுமை செய்வதாகவும் 8 பேர் இதுவரை அந்த நபரிடம் சிக்கியிருப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து மிகப்பெரிய ஆபரேஷன் ஒன்றை நடத்தி கடந்த திங்களன்று அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுவரை இப்படி வித்தியாசமான குற்றவாளியை பார்த்ததில்லை எனக்கூறும் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட குற்றவாளி அந்த பெண்களை கவனித்துக்கொள்ள விரும்பியதாகவும் நான் அவர்களுடன் டேட்டிங் செல்வதற்கு விருப்பம் பட்டதாகவும் கூறியதாக தெரிவித்துள்ளனர். அதோடு அந்த நபர் ஒரு பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு பிறகு அந்தப் பெண் வீட்டிற்கு செல்வதற்காக தனது சைக்கிளை கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த வித்யாசமான வழக்கு வெகுவிரைவில் நீதிமன்றத்திற்கு வர இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.