Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட மகிழ்ச்சி ….!!

தமிழகத்தில் இன்று மட்டும்  4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 5,106 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,07,416 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு 2,236ஆக உள்ளது. இன்று மட்டும் 44,186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது என்றுமே இல்லாத அதிகமாகும். மொத்த பரிசோதனை 17,09,459ஆக உள்ளது.

அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,157 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 82,128ஆக அதிகரித்துள்ளது. 15,038 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் 46,714 மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 68.69% குணமடைந்துள்ளனர்.

சென்னையில் 13 நாட்களாக கொரோனா தொற்று 2000த்திற்கும் கீழ் உள்ளது. அதே போல 47ஆவது நாளாக தமிழகத்தில் இறப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. அதே நேரம் இன்று இதுவரை இல்லாத பரிசோதனையும், இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் குணமடைந்து சென்றோர் எண்ணிக்கையும் தமிழக மக்களை நம்பிக்கை பெற வைத்துள்ளது. தமிழக அரசின் சிறப்பான சுகாதார நடவடிக்கைக்கு இதுவே சான்று என்று அரசை அனைவரும் பாராட்டுகின்றனர்.

Categories

Tech |